ஆசிரியர்களுக்கு பொறுமை மிகவும் அவசியம் என, நாட்டு நலப்பணித்திட்ட சென்னை மண்டல இயக்குனர் சாமுவேல்செல்லையா பேசினார்.
சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் "ஆசிரியர்களின் பணி' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் வ.பாண்டியராஜன் தலைமை வகித்தார். இதில், சாமுவேல் செல்லையா பேசியதாவது:
ஆசிரியர் பணி என்பது மகத்தான பணியாகும். முதலாம் வகுப்பு மாணவருக்கு தமிழ் எழுத்தினை கற்றுக்கொடுக்கும் ஆசிரியரின் பணி மிகவும் கடினமானது. பொதுவாக, ஆசிரியர்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருந்தால், 40 பேரும் 40 விதமாக செயல்படுவார்கள். அவர்களை ஒருங்கிணைத்து செயல்படுவது ஆசிரியரின் பணியாகும்.
ஆசிரியர் கற்றுக்கொடுப்பவை மாணவர்களுக்கு மனதில் ஆழமாக பதிந்துவிடும். எனவே, ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது கவனமாக செயல்பட வேண்டும். ஆசிரியர் என்பவர் மாணவர்களின் ஒளி விளக்கு. மாணவர்கள் ஆசிரியர் செல்லும் பாதையில் தான் செல்வார்கள்.
எனவே, ஆசிரியர்கள் சிறப்பாக செயல்பட்டு, மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். பாடங்களைத் தவிர, நூலகங்களுக்கு சென்று நல்ல புத்தகங்களை படிக்க அறிவுறுத்த வேண்டும். நேரம் ஒதுக்கி விளையாட்டிலும் ஈடுபட செய்ய வேண்டும். வகுப்பில் உள்ள மாணவர்களின் திறனை கண்டறிந்து, அதில் அவர்கள் வெற்றி பெற ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
முன்னதாக ஒருங்கிணைப்பாளர் எம்.ரிஃபயா மீரா வரவேற்றார். வி.கார்த்திகை செல்வம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகளாவிய பங்குச் சந்தை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்த முதல்வர் விஜய்!

ஜி7 உச்சிமாநாட்டுக்கிடையே அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி திட்டம்!

பொறியியல் கலந்தாய்வு! ரேண்டம் எண் முக்கியத்துவம் பெறுவது ஏன்?
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!


