விருதுநகர் பவுண்டு தெருவில் உள்ள சுகாதார வளாகம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அதனை உடனடியாக சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் நகராட்சி 31-ஆவது வார்டுக்கு உள்பட்ட பவுண்டு தெருவில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 2002-03-இல் ரூ.4 லட்சம் செலவில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்தது.
இந்த சுகாதார வளாகத்தை காமராஜர் புறவழிச்சாலை, பவுண்டு தெரு, கருப்பசாமி கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், தற்போது, அந்த
சுகாதார வளாகத்தின் மேற்கூரை பழுதடைந்து, கான்கிரீட் கம்பி வெளியே தெரிகிறது. மேலும், ஜன்னல்களும் பழுதடைந்து விட்டன. இதனால், சுகாதார வளாகத்துக்கு பொதுமக்கள் சென்று வர அச்சப்படுகின்றனர்.
எனவே, பழுதடைந்த சுகாதார வளாகத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து 500 கனஅடி

மேம்பாலத்தில் மோதிய கன்டெய்னா் லாரி; போக்குவரத்து பாதிப்பு

மொகரம், பௌா்ணமி: 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

முட்டை விலை ரூ.6.45-ஆக நீடிப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


