மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

அருப்புக்கோட்டை அருகே கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே  மழைநீர் வரத்துக் கால்வாயைத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Updated On :18 ஏப்ரல் 2018, 8:30 am IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே  மழைநீர் வரத்துக் கால்வாயைத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில்  3000க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தின் நிலத்தடி நீராதாரமாக பெரிய கண்மாயும், கட்டப்பு ஊருணியும் உள்ளன. இதில் அப்துல் கலாம் தெரு உள்ளிட்ட பல  பகுதிகளிலிருந்து சேகரமாகும் மழைநீர் செல்ல சுமார் 6 அடி அகல மழைநீர் வரத்துக்கால்வாய் உள்ளது.
இந்தக் கால்வாய் கடந்த சில ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பும் இன்றி  புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் பெரியகண்
மாய்க்கும்,  கட்டப்பு ஊருணிக்கும் நீர் செல்வது தடைப்பட்டுள்ளது. 
இக்கால்வாயை சீர் செய்து விட்டால் மழைக்காலத்தில் எளிதில்  கண்மாய்களில் சேர வழிகிடைக்கும்.  எனவே கால்வாயை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.