சிவகாசிப் பகுதியில் தேமுதிக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

சிவகாசிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக கூட்டணியில் உள்ள விருதுநகர் மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் ஆர்.அழகர்சாமி வாக்கு சேகரித்தார்.
Published on

சிவகாசிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக கூட்டணியில் உள்ள விருதுநகர் மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் ஆர்.அழகர்சாமி வாக்கு சேகரித்தார்.
சிவகாசியில் ரிசர்வ் லயன், நேருஜிநகர், சிலோன்காலனி, லட்சுமியாபுரம், அய்யம்பட்டி, ஆனையூர், சாமிநத்தம், வேண்டுராயபுரம், ஈஞ்சார், நடுவப்பட்டி, கிருஷ்ணப்பேரி, நிறைமதி, நாகலாபுரம், வடபட்டி,  சாரதாநகர் , திருப்பதிநகர் உள்ளிட்ட 32 இடங்களில் வேனில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியது: நான் வெற்றி பெற்றால், பட்டாசு தொடர்பான வழக்கை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுப்பேன். மேலும் பட்டாசுத் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாப்பேன். மக்களின் பிரச்னைகளை நன்கு அறிந்தவன் நான். எனவே மக்கள் நலனுக்காக பாடுபடுவேன் என்றார். 
வேட்பாளருடன் அதிமுக சிவகாசி ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி, திருத்தங்கல் நகரச் செயலாளர் பொன்சக்திவேல் உள்ளிட்டோர் சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com