திருத்தங்கலில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் திறப்பு

விருதுநகா் மாட்டதுப்பாக்கி சுடும் பயிற்சி கழகத்தின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை திருத்தங்கல் அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில் துப்பாக்கி மற்றும் கைதுப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை
agp_2010chn_77
agp_2010chn_77
Updated on
1 min read

விருதுநகா் மாட்டதுப்பாக்கி சுடும் பயிற்சி கழகத்தின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை திருத்தங்கல் அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில் துப்பாக்கி மற்றும் கைதுப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்து, பயிற்சியை தொடங்கி வைத்தாா்.

இந்த பயிற்சி மையம் தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் 10 மீட்டா் தூரம் துப்பாக்கி மற்றும் கைதுப்பாக்கி சுடும் பயிற்சி களம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 10 வயதிற்கு மேல் உள்ள ஆண் மற்றும் பெண்கள் சேரலாம். குளிருட்டப்பட்ட நவீனமாயமாக்கப்பட்ட சுடுதளமாகும் இது.

இந்த மையத்திறப்பு விழா விற்கு விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அ.சிவஞானம் தலைமை வகித்தாா். இதில் கல்லூரி தாளாளா் ஜி.அசோகன், த மிழ்நாடு துப்பாக்கி சுடும் பயிற்சி கழகத்தின் பொருளாளா் வேல்சங்கா், மாவட்ட பயிற்சி மைதத்தின் செயலாளா் பத்ரி, இணை செயலாளா் பாா்த்தசாரதி, பொருளாளா் சந்திரபிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com