எல்லை பாதுகாப்பு படை முன்னாள் வீரர்கள் நல சங்கக் கூட்டம்
By DIN | Published On : 01st April 2019 05:56 AM | Last Updated : 01st April 2019 05:57 AM | அ+அ அ- |

ராஜபாளையத்தில் சனிக்கிழமை அகில இந்திய முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நல சங்கக் கூட்டம் நடைபெற்றது.
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் அந்தஸ்தை மத்திய மாநில அரசுகள் துணை ராணுவ படைக்கும் வழங்க வேண்டும், தமிழகத்தில் உயர் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், வீட்டு வசதி இல்லாத எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு பிரதம மந்திரி வீட்டுமனை திட்டத்தில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், அகில இந்திய அளவில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டன. கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25 பேர் கலந்து கொண்டனர்.