சிவகாசியில் இரு சக்கர வாகனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசாரம்
By DIN | Published On : 01st April 2019 05:59 AM | Last Updated : 01st April 2019 05:59 AM | அ+அ அ- |

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரு சக்கர வாகனத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர்.
சிவகாசி அருகே நாரணாபுரம், போஸ் காலனி, சாமிபுரம் காலனி, முருகன் காலனி, மீனாட்சி காலனி, பள்ளபட்டி, செங்கமலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அக்கட்சியினர் பிரசாரம் மேற்கொண்டனர்.
இதில் அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி.பாலசுப்பிரமணியம், நகரச் செயலாளர் கே.முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.என்.தேவா, காங்கிரஸ் நகரத் தலைவர் டி.குமரன், திருத்தங்கல் நகர திமுக பொறுப்பாளர் உதயசூரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.