மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் அமைய வேண்டி சிவகாசியில் உள்ள விஸ்வநாதர்-விசாலாட்சியம்மன் கோயிலில் பாஜகவினர் சனிக்கிழமை தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்.
சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் கோ.பார்த்தசாரதி தலைமையில் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் தங்கராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் பழனிச்சாமி , சிவகாசி நகர துணைத் தலைவர் ஜி.ஆறுமுகச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.