தேர்தல் விதி மீறல் 4 வாகனங்கள் பறிமுதல்
By DIN | Published On : 01st April 2019 06:04 AM | Last Updated : 01st April 2019 06:04 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் நடத்தை விதிகளை மீறிச் சென்ற நான்கு வாகனங்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் மல்லியில் உள்ள சோதனைச் சாவடி அருகே, ஸ்ரீவில்லிபுத்தூர் நிலை கண்காணிப்புக் குழுத் தலைவர் சற்குணம் தலைமையில் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தென்நாடு மக்கள் கட்சி கொடி கட்டப்பட்ட கார்கள் வந்தன. அலுவலர்கள் வாகனங்களைத் தணிக்கை செய்தபோது தேர்தல் நடத்தை விதிகளுக்கு புறம்பாக அனுமதியின்றி கார்களில் கட்சிக் கொடி கட்டிக் கொண்டும்,
170 கட்சி விளம்பர சுவரொட்டிகளை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து 4 வாகனங்களையும் பறிமுதல் செய்து மல்லி காவல் நிலையத்தில் அலுவலர்கள் ஒப்படைத்தனர்.