இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற 70 சேலைகள் பறிமுதல்
By DIN | Published On : 11th April 2019 07:14 AM | Last Updated : 11th April 2019 07:14 AM | அ+அ அ- |

சாத்தூர் அருகே இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 70 சேலைகளை தேர்தல் பறக்கும் படையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் வந்தவர் ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலர் தெக்கூரை சேர்ந்த பாண்டியராஜன் (31) என்பது தெரியவந்தது. மேலும் கட்சியினருக்கு கொடுப்பதற்காக 70 சேலைகள் கொண்டு செல்லபட்டதும், உரிய ஆவணமின்றியும், விதிமுறையை மீறி கட்சி தொடர்பான துண்டு பிரசுங்கள் கொண்டு செல்லப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் 70 சேலைகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் பாண்டியராஜன் மீது சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.