சாத்தூர் அருகே ரூ.60 ஆயிரம் பறிமுதல்
By DIN | Published On : 12th April 2019 07:16 AM | Last Updated : 12th April 2019 07:16 AM | அ+அ அ- |

சாத்தூர் அருகே காரில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.60 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள நாரணாபுரம் சந்திப்பில், தேர்தல் பறக்கும் படையினர் அதிகாரி கலைவாணி தலைமையில் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், ஏழாயிரம்பண்ணை பகுதியைச் சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் ராமகிருஷ்ணன் ரூ.60 ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது. வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வாங்க கொண்டு செல்வதாக அவர் கூறினார். ஆனால் உரிய ஆவணமில்லததால் பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ரெங்கநாதனிடம் ஒப்படைத்தனர்.