சாலை, குடிநீர், கழிப்பறை பிரச்னைகளுக்கு தீர்வு: சாத்தூர் அமமுக வேட்பாளர் உறுதி
By DIN | Published On : 12th April 2019 07:16 AM | Last Updated : 12th April 2019 07:16 AM | அ+அ அ- |

சாத்தூர் நகரில் சாலை, குடிநீர், கழிப்பறை பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என அமமுக வேட்பாளர் எஸ்.ஜி. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சாத்தூர் நகர் பகுதி, மேலகாந்தி நகர், அண்ணா நகர், வெள்ளகரை சாலை, பெரியார் நகர், குருலிங்காபுரம் உள்ளிட்ட 18-க்கு மேற்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின்போது, நகர் பகுதிகளில் நிலுவையில் உள்ள சாலை, குடிநீர், கழிப்பறை பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று கூறி வாக்கு சேகரித்தார். தனக்கு பரிசுப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தால், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெற்றுத்தரப்படும் என உறுதியளித்தார். விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பரமசிவன் ஐயப்பனுக்கும் பரிசுப்பெட்டிச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
வாக்குசேகரிப்பின் போது அமமுக நகரச் செயலாளர் ஜீ.ஆர்.முருகன், அமைப்பு சாரா ஒட்டுநரணி மாநில துணைச் செயலாளர் இளங்கோவன், எஸ்.டி.முனீஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.