மல்லங்கிணறில் ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து, மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் புதன்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வேட்பாளர் நவாஸ் கனி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் புதன்கிழமை கூட்டணி கட்சிகள் சார்பில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாவட்டச் செயலர் அர்ச்சுனன் பேசினார்.
அப்போது அவர், கடந்த 5 ஆண்டுகளில் விலைவாசி உயராமல் பார்த்துக் கொண்டதாக பாஜகவினர் கூறுகின்றனர். ஆனால், பெட்ரோல், எரிவாயு, தங்கம் விலை பன்மடங்கு அதிகரித்து விட்டது.
அதிமுக ஆட்சியில் பேருந்து கட்டணம் 100 சதவீதம் உயர்ந்து விட்டது. வீடுகளுக்கான சொத்து வரியை 50 சதவீதம் உயர்த்தி விட்டனர். குப்பைக்கும் வரி வசூல் செய் கின்றனர். வரிக்கு மேல் வரியை சுமத்தி பொது மக்களை வாட்டி வதைக்கும் அரசுகளாக பாஜக, அதிமுக உள்ளன என்றார். இக்கூட்டத்தில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூ. உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.