விருதுநகர் மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருள்மொழித் தேவன், சிவகாசியில் செவ்வாய்க்கிழமை மாலை தனது இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்தார்.
முன்னதாக அவர் திருப்பரங்குன்றத்தில் வேனிலிருந்தவாறு தனது பிரசாரத்தை தொடங்கி, திருமங்கலம், அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக சிவகாசி வந்தார்.
சிவகாசியில் பேருந்து நிலையம் முன்பு தொடங்கி நான்கு ரத வீதிகள் வழியாகச் சென்று, தலைமை அஞ்சல் நிலையம் முன்பு உள்ள காமராஜர் சிலை அருகே பிரசாரத்தை நிறைவு செய்தார். அவர் வேனில் சென்றபோது, அதன் முன் தொண்டர்கள் மோட்டார் சைக்கிள்களில் கட்சிக் கொடியைக் கட்டியவாறு சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.