ராஜபாளையம் அருகே ரூ.1.17 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 17th April 2019 06:22 AM | Last Updated : 17th April 2019 06:22 AM | அ+அ அ- |

ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை அடுத்துள்ள புத்தூர் விலக்கில் செவ்வாய்க்கிழமை காலை தேர்தல் அதிகாரி ராஜேஸ்வர பாண்டியன் தலைமையில் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த ஆறுமுகம், ஈஸ்வரன், ஐயப்பன் ஆகிய மூவரிடம் ரூ. 1லட்சத்து 17 ஆயிரத்து 500 இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் கார் விற்பனையில் கிடைத்த பணத்தை கொண்டு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். பணத்தை ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...