கழிவு நீரோடை மீது கட்டப்பட்டு சேதமடைந்த பாலத்தை சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 26th April 2019 02:07 AM | Last Updated : 26th April 2019 02:07 AM | அ+அ அ- |

ராஜபாளையத்தில் கழிவு நீரோடை மீது கட்டப்பட்டு சேதமடைந்த பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் சங்கரன்கோவில் முக்குப் பகுதியில் இருந்து அம்பலப்புளி பஜார் செல்லும் வழியில் உள்ள கழிவு நீரோடை மீது கட்டப்பட்டுள்ள பாலத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் வியாபாரிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு
பெய்த மழையினால் பாலத்தில் பள்ளம் விழுந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது.
எனவே நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.