ஆடிப்பூர விழா: ஸ்ரீவிலி.யில் சயன சேவை
By DIN | Published On : 04th August 2019 03:45 AM | Last Updated : 04th August 2019 03:45 AM | அ+அ அ- |

: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உற்சவத்தின் ஏழாம் நாளான வெள்ளிக்கிழமை இரவு சயன சேவை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உற்சவ விழாவை முன்னிட்டு, ஜூலை 27 இல் கொடியேற்றப்பட்டது. இதை தொடர்ந்து தினமும் காலையில் ஸ்ரீ ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி யளித்தனர்.
மேலும், தினந்தோறும் இரவு ஆண்டாள், ரெங்கமன்னார் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. விழாவின் ஐந்தாம் நாளான ஜூலை 31 இல் ஐந்து கருட சேவை நடைபெற்றது.
இந்த நிலையில், ஏழாம் திருநாளான வெள்ளிக்கிழமை இரவு கோயிலிருந்து புறப்பட்ட ஆண்டாள், ரெங்கமன்னார் மாடவீதி ரதவீதி வழியாக சென்று கிருஷ்ணன்கோயிலில் எழுந்தளினர். அங்கு ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னார் சயன திருக்கோல அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண் டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று தேரோட்டம்: ஞாயிற்றுக்கிழமை ஆண்டாள் தேரோட்ட விழா நடைபெற உள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளதால் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளன. சயன சேவை நிகழ்ச்சியில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், கோயில் பட்டர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...