குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
By DIN | Published On : 04th August 2019 03:44 AM | Last Updated : 04th August 2019 03:44 AM | அ+அ அ- |

விருதுநகரில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு.ராஜராஜன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும். குழந்தை திருட்டு, கடத்தலை தடுக்க வேண்டும், குழந்தை பாலியல் தொடர்பாக விழிப்புணர்வு வேண்டும்.
மேலும் குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும், குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பள்ளி மாணவிகள் மற்றும் போலீஸார், அரசு ஊழியர்கள் ஏந்தியவாறு கோஷமிட்டு சென்றனர்.
பேரணி நகராட்சி சாலை, மேலரத வீதி, பஜார், மாரியம்மன் கோயில் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை உதவி காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், பஜார் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ப்ரியா மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வேல்டு விஷன் இந்தியா அமைப்பினர் செய்திருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...