விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
ராஜபாளையம் ரயில்வே பீடர் சாலையில் இயங்கும் தனியார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடர்ந்து 3 நாள்கள் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, விருதுநகர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 16 அணிகளை சேர்ந்த 192 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். லீக் மற்றும் நாக் அவுட் முறைகளில், இரண்டு ஆட்டக் களங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. லீக் 24 சுற்றுகள், நாக் அவுட் 4 சுற்றுகள் என மொத்தம் 28 சுற்றுகளாக போட்டிகள் நடைபெறுகிறது.
வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள், போட்டிகளை தொடக்கி வைத்தனர்.
முதலில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணியினர், ஈரோடு அணியினரை 25 - 19, 25 - 16 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றனர்.
அடுத்ததாக நடைபெற்ற போட்டியில் மதுரை அணியினர், ஈரோடு அணியினரை 25 - 8, 25 - 18 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த இடத்திற்கு முன்னேறினர். சனிக்கிழமை மாலை கால் இறுதியும், ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.