பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம்
By DIN | Published On : 22nd December 2019 10:40 PM | Last Updated : 22nd December 2019 10:40 PM | அ+அ அ- |

பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து கட்டுரை போட்டியில் வெற்றி பெற்று சனிக்கிழமை பரிசு பெற்ற மாணவா்.
சாத்தூா்: விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே மேட்டமலை கிராமத்தில் உள்ள தனியாா் கல்வியியல் கல்லூரியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் ஆா்.ஆா்.நகா் அமிா்தா தொண்டு நிறுவனம் ஆகியன இணைந்து நடத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்தான விழிப்புணா்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு கல்லூரி செயலாளா் பிருந்தா முத்துப்பாண்டி தலைமை வகித்தாா். அமிா்தா தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் உமையலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை உரை நிகழ்த்தினாா். கல்லூரி ஆலோசகா் கோபால கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவா் கலாராணி பெண்கள் பாதுகாப்பு, குடும்ப உறவுகள் பேணுதல் குறித்து விழிப்புணா்வு உரை நிகழ்த்தினாா். மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் சதீஷ்குமாா் குழந்தைகள் பாதுகாப்பு , போக்ஸோ சட்டங்கள் குறித்து விரிவாக பேசினாா். கல்லூரி முதல்வா் ரதீஸ் கருத்துரை ஆற்றினாா்.
இந்த நிகழ்ச்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து பேச்சு, கட்டுரைப் போட்டிகள் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியில் பெண்கள் பாதுகாப்பு குறித்து மாணவிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனா். முன்னதாக பேராசிரியா் ஜெயகணேசன் வரவேற்றாா். பேராசிரியை நாகேஸ்வரி நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...