சிவகாசி பெரியகுளம் கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரிக்கை
By DIN | Published On : 04th January 2019 01:20 AM | Last Updated : 04th January 2019 01:20 AM | அ+அ அ- |

சிவகாசி பெரியகுளம் கண்மாயில் குப்பைகள் கொட்டுவதையும், கழிவுநீர் கலப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலப் பொருளாளர் திலகபாமா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
சிவகாசி நகருக்கு நிலத்தடி நீராதாரமாக உள்ளது பெரியகுளம் கண்மாய். இந்த கண்மாயில் தற்போது கட்டட கழிவுகளும், குப்பைகளும் கொட்டப்படுகின்றன.
மேலும் கழிவுநீரும் கலந்து சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இக்கண்மாயில் குப்பைகள் கொட்டுவதையும், கழிவு நீர் கலப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கண்மாய்க்கு நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.