விருதுநகரில் மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டி
By DIN | Published On : 07th January 2019 06:09 AM | Last Updated : 07th January 2019 06:09 AM | அ+அ அ- |

விருதுநகரில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையேயான மாவட்ட அளவிலான யோகாசன போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விருதுநகரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.
அதில், கததாசனம், மயூராசனம், கால பைரவ ஆசனம், விருச்சக ஆசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை மாணவ, மாணவிகள் செய்து காட்டினர். இதில், சிறப்பாக ஆசனம் செய்தவர்களை நடுவர்கள் தேர்வு செய்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமார் ராஜா பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை கலைக்கோயில் யோகாலயத்தினர் செய்திருந்தனர். முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு யோகா இளஞ்செழியன் வரவேற்றார்.