ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.24 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 22nd March 2019 07:11 AM | Last Updated : 22nd March 2019 07:11 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூரில் வியாழக்கிழமை உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.24 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், தென்காசி (தனி) மக்களவைத் தேர்தல், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியின் நிலை கண்காணிப்புக்குழு 3இன் தலைவர் சிவக்குமார் தலைமையிலானகுழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில் வந்த கரூரைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் பாண்டியராஜன் என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூ.1.24 லட்சம் வைத்திருந்தார்.
இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் குழுவினர் பணத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...