கல்லூரியில் நடிப்பு குறித்த பயிற்சிப் பட்டறை
By DIN | Published On : 22nd March 2019 07:09 AM | Last Updated : 22nd March 2019 07:09 AM | அ+அ அ- |

சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி காட்சி தொடர்பியல்துறை சார்பில் வியாழக்கிழமை நடிப்பு குறித்த பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முதல்வர் செ.அசோக் தலைமை வகித்தார். திரைப்பட நடிகர் ரா.பாரதிதாசன் பயிற்சி அளித்துப் பேசியதாவது: மேடைநாடகம் என்பது ரசிகர்களின் முன்னிலையில் நடப்பது. எனவே மேடை நாடகத்தில் வசன உச்சரிப்பு, நடிப்பு உள்ளிட்டவை மிகச்சரியாக இருக்க வேண்டும். திரைப்படம் தயாரிக்கும் போது, நடிக்கும் நடிகர், இயக்குநர் திருப்தி அடையும் வரை நடிக்க வேண்டும். திரைப்படத்தில் சிறிய தவறுகளை கணினி மூலம் திருத்திக் கொள்ளலாம்.
முன்பு திரைத்துறையில் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கிய அனைவரும் நாடகத்துறையிலிருந்து வந்தவர்கள் தான். எனவே நாடகங்களில் சிறப்பாக நடிக்கும் பயிற்சியை முதலில் மாணவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு மாணவர்களாகிய உங்களுக்குள்ளேயே ஒரு நாடகத்தை தயாரித்து, நடித்துப் பார்க்க வேண்டும். அப்போது தான் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என புரியும் என்றார்.
முன்னதாக துறைத்தலைவர் சுந்தரேசன் வரவேற்றார். மாணவி வீரலட்சுமி நன்றி கூறினார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...