காரியாபட்டியில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி புதன்கிழமை இரவு காரியாபட்டியில் கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இக்கிராமிய கலை நிகழ்ச்சியை வட்டாட்சியர் ராம்சுந்தர் தொடங்கி வைத்தார். இதில், நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும், ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது. நல்ல வேட்பாளரை தேர்வு செய்வதன் மூலம் நல்ல பிரதமரை தேர்வு செய்யலாம் என்பதை கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த கலை நிகழ்ச்சியில் தனலட்சுமி சேவகன் குழுவினர் மற்றும் அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றம், ராயல் தப்பாட்ட கலைக்குழுவினர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், துணை வட்டாட்சியர் தனக்குமார், தேர்தல் துணை வட்டாட்சியர் புகழேந்தி, வருவாய் ஆய்வாளர் செல்லத்துரை மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.