சமையல் செய்யும் போது தீக்காயமடைந்த பெண் சாவு
By DIN | Published On : 22nd March 2019 07:10 AM | Last Updated : 22nd March 2019 07:10 AM | அ+அ அ- |

சிவகாசி அருகே சமையல் செய்யும் போது தீக்காயமடைந்த இளம் பெண் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
சிவகாசி அருகே மேலபெத்துலுபட்டியைச் சேர்ந்த பட்டாசுத் தொழிலாளி பெத்துலு (49). இவரது மகள் முருகேஸ்வரி (18). இவரும் பட்டாசுத் தொழிலாளி. இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி முருகேஸ்வரி சமையல் செய்யும் போது, மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்பிலிருந்து வெளி வந்த தீ, அவரது உடையில் பற்றி பலத்த தீக்காயமடைந்தார்.
இதையடுத்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...