திருச்சுழி அருகே ரூ.3.07 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 30th March 2019 07:33 AM | Last Updated : 30th March 2019 07:33 AM | அ+அ அ- |

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ரூ,3.07 லட்சம், ராஜபாளையத்தில் ரூ.95 ஆயிரத்தை தேர்தல் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கல்லூரணி கிராமத்தில் வெள்ளிக்கிழமை தேர்தல் பறக்கும்படை அதிகாரி மகேஸ்வரி தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த தனியார் பீடி நிறுவனத்தின் வாகனத்தைச் சோதனை செய்தனர். வாகனத்தில் இருந்த விற்பனை முகவரின் பையிலிருந்து ரூ. 3,07,340 பணம் சிக்கியது. ஆனால் அவரிடம் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. அதனால் அப்பணத்தைப் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ராஜபாளையம்: ராஜபாளையம் தென்காசி சாலை அசையா மணி விளக்கு சந்திப்பில் தேர்தல் அலுவலர் சிவராஜா தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சரக்கு வாகனத்தில் வந்த சிவகிரி தாலுகா தேவிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சோலையப்பன்(57) என்பவரை சோதனையிட்டனர்.
அவர் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.95,090-யை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...