ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தன மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா: 3 ஆயிரம் பக்தர்கள் தீ மிதித்தனர்
By DIN | Published On : 05th May 2019 01:20 AM | Last Updated : 05th May 2019 01:20 AM | அ+அ அ- |

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தன மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் சனிக்கிழமை சுமார் 3 ஆயிரம் பேர் தீ மிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.
கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. பன்னிரண்டாம் திருநாளான சனிக்கிழமை மதியம் மூன்று மணிக்கு பக்தர்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் 3000 பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். முன்னதாக இவர்கள் காப்புக்கட்டி ரத வீதிகளில் வலம் வந்தனர்.
பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா எழுந்தருளினர். சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். டிஎஸ்பி ராஜா தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.