இரு சக்கர வாகனத்தில் மணல் திருடியவர்கள் கைது
By DIN | Published On : 05th May 2019 01:21 AM | Last Updated : 05th May 2019 01:21 AM | அ+அ அ- |

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூரில் மணல் திருடிய இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
ராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து போலீஸார் ரோந்து மேற்கொண்டனர். சேத்தூர் சோலைசேரி விலக்கில் வேகமாக வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் அரசு அனுமதியின்றி முறைகேடாக மணல் கடத்தியது தெரியவந்தது. விசாரணையில் சுந்தர நாச்சியார்புரத்தைச் சேர்ந்த அருள்ராஜ் (32), சேத்தூரைச் சேர்ந்த ராஜா (35) ஆகியோர் மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. கடத்தி வரப்பட்ட 8 மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து, இருவரையும் சேத்தூர் காவல் சார்பு ஆய்வாளர் சந்திரமோகன் கைது செய்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...