தந்தை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மகன் கைது
By DIN | Published On : 19th May 2019 04:11 AM | Last Updated : 19th May 2019 04:11 AM | அ+அ அ- |

செலவுக்கு பணம் தர மறுத்த தந்தை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மகனை போலீஸார் கைது செய்தனர்.
சிவகாசி ராம நாடார் தெருவைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி வேல்முருகன் (53). இவரது மகன் முத்துப்பாண்டி(19). இவர் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதாக தந்தை வேல்முருகனிடம் கடந்த சில மாதங்களுக்கு முன் முப்பதாயிரம் ரூபாய் வாங்கினாராம். அந்த பணத்தின் மூலம் மும்பை வரை சென்று விட்டு மீண்டும் சிவகாசி வந்து விட்டாராம். இந்நிலையில் சனிக்கிழமை, வெளிநாடு செல்லவேண்டும் என தந்தையிடம் ரூ.1 லட்சம் கேட்டாராம். அதற்கு தந்தை மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது வீட்டின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை எடுத்து தந்தை மீது ஊற்றி தீ வைத்தாரம். இதில் பலத்த காயமடைந்த தந்தை சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனர்.