சிவகாசி, திருத்தங்கல் ரயில் நிலையங்களில் தரமற்ற பொருள்கள் விற்பதாகப் புகார்
By DIN | Published On : 26th May 2019 12:40 AM | Last Updated : 26th May 2019 12:40 AM | அ+அ அ- |

சிவகாசி மற்றும் திருத்தங்கல் ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடைக் கடைகளில் தரமற்ற பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சிவகாசி மற்றும் திருத்தங்கல் ரயில்நிலையங்களில் வெகுநாள்களாக நடைமேடை கடை இல்லாமல் இருந்தது. கடந்த சில மாதங்களாக இரு ரயில் நிலையங்களிலும் நடைமேடை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் தரமற்ற பிஸ்கட், கேக், குளிர்பானங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ரயில்வே ஊழியர் ஒருவர் கூறியது: இதுபோன்ற நடைமேடை கடைகளில், ரயில்வேத் துறை அதிகாரிகளின் ஆதரவுடன் சந்தையில் இல்லாத பொருள்களை வாங்கி விற்பனை செய்கிறார்கள்.
இதுகுறித்து கேள்வி எழுப்பினால், கடையில் உள்ள பொருள்கள் அனைத்தும் ரயில்வே வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டவையாகும் என பதில் கூறுவார்கள். இதனால் அவர்கள் விற்பனை செய்யும் பொருள்களை மட்டுமே பயணிகள் வாங்கிச் செல்ல முடியும் என்ற நிலை தான் உள்ளது என்றார்.