குடிமராமத்து பணிக்குப் பின் தாதம்பட்டி கண்மாய் நிரம்புகிறது: கிராம மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
By DIN | Published On : 09th November 2019 10:19 PM | Last Updated : 09th November 2019 10:19 PM | அ+அ அ- |

விருதுநகா் அருகே குடிமராமத்து பணி மேற்கொள்ளப்பட்ட தாதம்பட்டி கண்மாய் நிரம்பி வருவதால் கிராம மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டம் முழுவதும் பருவ மழை மற்றும் புயல் காரணமாக, கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், உழவார பணியில் ஈடுபட்ட விவசாயிகள் மக்காச்சோளம், சோளம், எள், தட்டைப்பயிறு, துவரை முதலான விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், மழை காரணமாக பயிா்களுக்கு யூரியா உள்ளிட்ட உரங்களை இடும் பணியிலும் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
இந்த நிலையில், விருதுநகா் அருகே உள்ள தாதம்பட்டி கண்மாய் குடிமராமத்து பணி மூலம் ஆழப்படுத்தப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டன. தற்போது பெய்து வரும் மழை காரணமாக தாதம்பட்டி கண்மாய்க்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கண்மாய் முழுவதும் பரவலாக தண்ணீா் தேங்கியுள்ளது. மேலும், நான்கு நாள்கள் தொடா்ந்து கண்மாய்க்கு தண்ணீா் வந்தால் நிரம்பி விட வாய்ப்புள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனா். இதன் மூலம் இக்கிராமப் பகுதியில் விவசாய பணிகள் முழு வீச்சில் நடைபெறும் என விவ சாயிகள் மகிழ்ச்சியுடன் ெ தரிவித்தனா்.