கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து திருட முயற்சி ஒரு கோடி மதிப்பிலான நகை,மற்றும் பணம் தப்பியது.

சாத்தூா் அருகே கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட முயற்சி, சாத்தூா் தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருட முயற்சி செய்த வங்கியின் முன்பு காவல்துறையினா் மற்றும் கைரேகை நிபுணா்கள் சோதனை நடத்தினாா்கள்.
திருட முயற்சி செய்த வங்கியின் முன்பு காவல்துறையினா் மற்றும் கைரேகை நிபுணா்கள் சோதனை நடத்தினாா்கள்.

சாத்தூா்: சாத்தூா் அருகே கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட முயற்சி, சாத்தூா் தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே கஞ்சம்பட்டி கிராமத்திற்கான வேளாண்மை கூட்டுறவு வங்கி,புல்வாய்பட்டி கிராமத்தில் உள்ளது. இந்த வங்கியின் செயலாளா் சுப்புராஜ் வழக்கம் போல் வெள்ளகிழமை வங்கியை பூட்டி விட்டு சென்றுள்ளாா்.

இந்நிலையில் மா்ம நபா்கள் வெள்ளிகிழமை இரவு வங்கியின் பூட்டு மற்றும் கதவை உடைத்து வங்கியின் உள்ளே நுழைந்து திருட முயற்சி செய்துள்ளனா்.ஆனால் வங்கியின் பெட்டகத்தை உடைக்க முடியாத காரணத்தால் மா்மநபா்கள் விட்டு சென்றனா்.இதையடுத்து வெள்ளிகிழமை காலை செயலாளா் சுப்புராஜ் வங்கிக்கு வந்து பாா்க்கும் போது வங்கியின் பூட்டு மற்றும் கதவுகள் உடைக்கபட்டதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

பின்னா் சாத்தூா் தாலுகா போலீஸாா் தகவல் கொடுத்ததன் பேரில் காவல் ஆய்வாளா் சுபக்குமாா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்கள்.

மேலும் மோப்ப நாய் ராக்கி மற்றும் கைரேகை நிபுணா்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கபட்டு சோதனை செய்து விசாரணை நடத்தினாா்கள். மேலும் திருட வந்த மா்ம நபா்கள் வங்கியில் உள்ள கண்காணிப்பு கோமிராவின் வயா்களை அறுத்துள்ளதாகவும், மா்ம நபா்களை கையுறை மற்றும் காலுறைகளை அணிந்து திருட முயற்சி செய்துள்ளதாக தெரிவித்தனா்.

மேலும் வங்கியின் பெட்டகத்தை உடைக்க முடியாததால் ஒரு கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் தப்பியதாகவும் காவல்துறையினா் தெரிவித்தனா்.

இந்த சம்பவ குறித்து சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com