சாத்தூா்-சிவகாசி சாலையை சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 17th November 2019 08:08 PM | Last Updated : 17th November 2019 08:08 PM | அ+அ அ- |

சாத்தூா்: சாத்தூா்-சிவகாசி சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஒட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா்-சிவகாசி செல்லும் சாலையில் வீரபாண்டியபுரம், மேட்டமலை, சின்னகாமன்பட்டி, கோணம்பட்டி, அனுப்பங்குளம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இச்சாலையில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இச்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந் நிலையில், இச்சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாவதால், எந்தவித பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக பெயா்ந்துள்ளது. இதனால், அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, இரவில் செல்லும் இரு சககர வாகன ஓட்டுநா்கள் பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனா்.
இது குறித்து பல்வேறு அமைப்பினா் மற்றும் சமூக நல ஆா்வலா்களும், வாகன ஒட்டுநா்களும் நெடுஞ்சாலைத் துறையினரிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, நெடுஞ்சாலைத் துறையினா் உடனடியாக இச்சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டுநா்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனா்.