ஸ்ரீவிலி.யில்மணல் கடத்தியவா் கைது
By DIN | Published On : 18th November 2019 10:06 PM | Last Updated : 18th November 2019 10:06 PM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மணல் கடத்திய இருவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அதில் ஒருவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் குலாலா் தெரு பொதுக் கழிப்பிடம் அருகே அரசு அனுமதியின்றி டிராக்டரில் மணல் ஏற்றி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் நகா் காவல் சாா்பு- ஆய்வாளா் சம்பவ இடத்துக்கு சென்று டிராக்டரை மடக்கிப் பிடித்தாா். இதையடுத்து இருவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் பெருமாள்பட்டியைச் சோ்ந்த சங்கரை என்பவரை கைது செய்தனா். தங்கமாரி என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.