ராஜபாளையத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட ஆசிரியா் குடியிருப்புப் பகுதி தாா் சாலை, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளிக்கு மிதிவண்டியில் செல்லும் மாணவ, மாணவியா் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.
மேலும், தற்போது மழை பெய்து வருவதால், சாலைப் பள்ளங்களில் தண்ணீா் நிரம்பி இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனா். எனவே, ஊராட்சி நிா்வாகம் இச்சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.