சிவகாசியில் கழிவுநீர் வாய்க்கால்களை சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 29th September 2019 05:26 AM | Last Updated : 29th September 2019 05:26 AM | அ+அ அ- |

பாஜக முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஜி.அறுமுகச்சாமி, தமிழக முதல்வருக்கு சனிக்கிழமை அனுப்பிய மனு விவரம்:
சிவகாசி நகரில் உள்ள கழிவு நீர், மழை நீர் வாய்க்கால்களான பொத்துமரத்து ஊருணி வாய்கால், மருத நாடார் ஊருணி வாய்கால், மணி கட்டி ஊருணி வாய்க்கால், சிவகாசி-விளாம்பட்டி சாலை, காந்தி சாலை உள்ளிட்ட பல சாலைகளை சீரமைத்து பல ஆண்டுகளாகிவிட்டது. கடைவீதிகளில் உள்ள கழிவு நீர் வாய்க்கால் மீது அனைத்துக் கடைகாரர்களும், தங்களது கடைகளின் பொருள்களை வைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழைக் காலங்களில் கழிவு நீரோடு, மழை நீரும் சேர்ந்து சாலையில் பாய்ந்து சுகாதார சீர் கேட்டினை உண்டாக்குகிறது. நகராட்சி நிர்வாகம், துப்பரவுப்பணிக்கு போதிய ஆள்கள் இல்லை எனக்கூறுகிறார்கள். எனவே சிவகாசி நகராட்சிக்கு தேவையான துப்புரவுத்தொழிலாளர்களை நியமிக்க வேண்டும் என அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.