மகளிர் கல்லூரியில் ஆளுமைத்திறன் மேம்பாட்டு முகாம்
By DIN | Published On : 29th September 2019 05:24 AM | Last Updated : 29th September 2019 05:24 AM | அ+அ அ- |

சிவகாசி எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரியில் சனிக்கிழமை ஆளுமைத்திறன் மேம்பாட்டு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முதல்வர் த.பழனீஸ்வரி தலைமை வகித்தார். விருதுநகர் தொழிலதிபர் எம்.ஏ.ஆர்.பி.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், தன்னம்பிக்கையே வெற்றியின் ரகசியமாகும். எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது. எதிலும் வெற்றி பெற விடாமுயற்சி தேவை. உடலை சீராக வைத்திருக்க போதிய உடற் பயிற்சி செய்ய வேண்டும். கல்லூரியில் உள்ள நூலகத்திற்கு சென்று நல்ல நூல்களை படிக்க வேண்டும்.
வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால், பிரச்னைகளை சுலபமாக எதிர்கொள்ளலாம் என்றார். என்.சிவபிரான், நல்ல பழக்கங்கள் என்ற தலைப்பில் பேசினார். முன்னதாக ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.யாஸ்மின் பீவி வரவேற்றார். உதவிபேராசிரியர் கே.மங்கயர்கரசி நன்றி கூறினார்.