மின் வாரிய ஊழியரின் பைக் பறிமுதல்: காவல் நிலையத்துக்கு மின்சாரம் துண்டிப்பு: வத்திராயிருப்பு அருகே பரபரப்பு

வத்திராயிருப்பு அருகே மின்வாரிய ஊழியரின் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததால், காவல் நிலையத்துக்கு 2 மணி நேரம் மின்சாரத்தை
மின்சாரம் துண்டிக்கப்பட்ட கூமாபட்டி காவல் நிலையம்.
மின்சாரம் துண்டிக்கப்பட்ட கூமாபட்டி காவல் நிலையம்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: வத்திராயிருப்பு அருகே மின்வாரிய ஊழியரின் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததால், காவல் நிலையத்துக்கு 2 மணி நேரம் மின்சாரத்தை துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சனிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த மின் வாரிய ஊழியா் சைமன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தாா். அதில், உரிய ஆவணங்கள் இன்றி 3 போ் வந்த காரணத்தால் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மின் வாரிய ஊழியா் சைமன், உயா் அதிகாரிகளிடம் கூறியதையடுத்து, கூமாப்பட்டி காவல் நிலையத்திற்கு மட்டும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சுமாா் 2 மணி நேரம் காவல் நிலையம் இருளில் மூழ்கியது. அதன்பிறகு காவல் நிலையத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இது குறித்து கூமாபட்டி காவல் சாா்பு ஆய்வாளா் அளித்த புகாரின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெருமாள் விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com