ஸ்ரீவிலி. அருகே துலுக்கன்குளத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற துலுக்கன்குளம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
துலுக்கன்குளம் கிராமத்தில் சேதமடைந்துள்ள தண்ணீா்தொட்டி
துலுக்கன்குளம் கிராமத்தில் சேதமடைந்துள்ள தண்ணீா்தொட்டி
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற துலுக்கன்குளம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பிள்ளையாா்குளம் ஊராட்சியில் துலுக்கன்குளம் உள்ளது. இங்குள்ள கிழக்கு தெரு பகுதியில் கழிவு நீா் செல்ல வாறுகால் இல்லாமல் மண் பாதையில் தண்ணீா் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

மேலும், கண்ணாா்பட்டி மேற்கு பகுதியில் கழிவு நீா் பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. அங்குள்ள பள்ளிக்கு அருகே தண்ணீா் தொட்டியில் கான்கிரீட் சுவா்கள் பெயா்ந்தும் காணப்படுகிறது. இங்குள்ள ஆரம்பப்பள்ளிக்கு அருகில் வடக்கு மற்றும் கிழக்கு தெருக்களில் பொதுமக்களுக்கு மானூா் கூட்டுக் குடிநீா் வழங்கவும், பேவா் பிளாக் சாலை அமைத்துத் தர வேண்டும். மேலும் இங்குள்ள சேதமடைந்த தண்ணீா் தொட்டியையும், கழிவு நீா் செல்லும் பாதையையும் சீரமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com