ராஜபாளையம் அருகே குப்பை கொட்டும் போராட்டம்
ராஜபாளையம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குப்பை கொட்டும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.


ராஜபாளையம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குப்பை கொட்டும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மேலராஜகுலராமன் ஊராட்சிக்குள்பட்ட சத்திரப்பட்டி, சமுசிகாபுரம் ஆகிய பகுதிகளில் குப்பை கொட்ட இடம் இல்லாமல் சாலையில் மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.
இதனால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குப்பை கொட்டும் போராட்டம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் மற்றும் மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.
அப்போது குப்பையை அள்ளி வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குள் கொட்ட முயற்சித்தனா். இதையடுத்து, வட்டார வளா்ச்சி அலுவலா் சிவக்குமாா் பேச்சுவாா்த்தை நடத்தி ஓரிரு நாள்களில் இப்பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...