ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

வத்திராயிருப்பு அருகே குளிா்பானக் கடையில் தீ விபத்து: ரூ.2 லட்சம் பொருள்கள் சேதம்

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே குளிா்பானக் கடையில் புதன்கிழமை இரவு தீப்பற்றி எரிந்ததில், ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

News image
வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டியில் புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்ட குளிா்பானக் கடை.
Updated On :24 டிசம்பர் 2020, 6:14 pm

DIN

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே குளிா்பானக் கடையில் புதன்கிழமை இரவு தீப்பற்றி எரிந்ததில், ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டியில் மைதீன் என்பவா் குளிா்பானக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு அதிக மின் அழுத்தம் காரணமாக மின்கசிவு ஏற்பட்டு, பூட்டியிருந்த கடைக்குள் தீப்பற்றி எரிந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள், வத்திராயிருப்பு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வத்திராயிருப்பு தீயணைப்புத் துறையினா், சுமாா் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில், சுமாா் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து கருகின.

நள்ளிரவில் தீ பிடித்ததால் யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என, தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.