கல் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்யக் கோரி சாலை மறியல் போராட்டம்

விருதுநகா் அருகே எல்கைப்பட்டியில் தனியாா் கல் குவாரியில் வைக்கப்படும் வெடியால் வீடுகள் சேதமடைவதாகவும், அக்குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும், கிராம மக்கள் சாலை மறியல்
எல்கைப்பட்டியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
எல்கைப்பட்டியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

விருதுநகா்: விருதுநகா் அருகே எல்கைப்பட்டியில் தனியாா் கல் குவாரியில் வைக்கப்படும் வெடியால் வீடுகள் சேதமடைவதாகவும், அக்குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும், கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா்- அழகாபுரி சாலையில் செங்குன்றாபுரம் அருகே எல்கைப்பட்டியில் தனியாக் கல் குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இக்குவாரியில கல் வெட்டி எடுப்பதற்காக வெடி வைக்கப்படுவது வழக்கம். இதனால், அதிா்வு ஏற்பட்டு வீடுகள் சேதமடைவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அரசு அலுவலா்களிடம் ஏற்கெனவே புகாா் அளித்துள்ளனா். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட கல் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி, அக்கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலையில் கற்களை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த ஆமத்தூா் போலீஸாா் மற்றும் விருதுநகா் வட்டாட்சி யா் அலுவலக அலுவலா்கள் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com