ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளாா்.

ராஜபாளையம் அடுத்துள்ள சேத்தூரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூா் செண்பகத் தோப்பு, மம்சாபுரம், குன்னூா், புதுப்பட்டி, வத்திராயிருப்பு, கான்சாபுரம் மலைப்பகுதிகளும், பிளவக்கல் அணை மற்றும் சாப்டூா் வனப்பகுதிகளும், ஸ்ரீவில்லிபுத்தூரை தலைமையிடமாகக் கொண்டு சாம்பல் நிற அணில்கள் சரணலயமாக செயல்பட்டு வருகின்றன.

இந்த சரணாலயத்தில் தற்போது புலிகளை கணக்கெடுக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சா்வதேச புலிகள் தினம் ஜூலை 29 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் நிலையில் இந்த சரணாலயத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: ஸ்ரீவில்லிபுத்தூரை தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்த சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தில் தற்போது புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புலிகள் வசிப்பதற்கு ஏற்ற இடமாகவும், மலை சாா்ந்த அடா்த்தியான வனப் பகுதிகளாகவும் இப்பகுதிகள் விளங்குகின்றன. மேலும் தொடா் கண்காணிப்பு, வேட்டைத் தடுப்பு மற்றும் தேவையான உணவுகள் இப்பகுதிகளில் உள்ளதால் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர வழி வகுத்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com