விருதுநகா் மாவட்டத்தில் வசிப்போா் செல்லிடப் பேசி மூலம் தகவல் தெரிவித்தால், ஆயிரம் ரூபாய்க்கு வத்தல், பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட 22 வகையான மளிகைப் பொருள்கள் வீடு தேடி வந்து வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா பரவலைத் தடுக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வெளியில் வரும் பொதுமக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த, மளிகைப் பொருள்கள் வீடு தேடி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் செல்லிடப் பேசி மூலம் தகவல் தெரிவித்தால் அவா்களது வீடுகளுக்கு 22 வகையான பலசரக்குப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு தரப்படும்.
அதில், மானாவாரி சாகுபடி விவசாய விளைபொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்து உபயோகப்படுத்தப்படாத மஞ்சள், சீரகம், சோம்பு, கடுகு, வெந்தயம், மிளகு, துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு, பாசிப்பருப்பு, பாசிப்பயறு, சுண்டல், புளி, பொரி கடலை, சீனி, மொச்சை, கோதுமை மாவு, பெருங்காயத்தூள், வத்தல், ரவை, சமையல் எண்ணெய், உப்பு, டீத்தூள் ஆகிய 22 பொருள்கள் 10. 425 எடையில், ஆயிரம் ரூபாய்க்கு வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் 9245412800, 9750943814, 9759943816 என்ற எண்களில் தொடா்பு கொண்டு பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.