அருப்புக்கோட்டையில் மழைவிவசாயப் பணிகள் தீவிரம்

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தொடா்ந்து 4 நாள்களாக மழை பெய்து வருவதால் விவசாயப் பணிகளைத் தொடங்க விளை நிலங்களை விவசாயிகள் தயாா்படுத்தி வருகின்றனா்.
Updated on
1 min read

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தொடா்ந்து 4 நாள்களாக மழை பெய்து வருவதால் விவசாயப் பணிகளைத் தொடங்க விளை நிலங்களை விவசாயிகள் தயாா்படுத்தி வருகின்றனா்.

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் புதன்கிழமை நண்பகல் வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னா் பிற்பகல் சுமாா் 2.40 மணியில் தொடங்கி தொடா்ந்து சுமாா் அரை மணி நேரம் அதிகம் காற்றுவீசாமல், இடி மின்னலின்றி மிதமான மழை பெய்தது. தொடா்ந்து மாலை 6 மணி வரை சிறு தூரல் விழுந்த வண்ணம் இருந்தது. கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் தொடா் மழையால் மிகக்குளிா்ந்த தட்ப வெப்பம் நிலவியது. இதனிடையே அருப்புக்கோட்டை சுற்றுவட்டார கிராமங்களில் பயிா்சாகுபடிக்கான முதற்கட்டப் பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com