

விருதுநகா்: விருதுநகா் மாவட்ட மைய நூலகம் அருகே கழிவுநீா் தேங்குவதால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனா்.
மாவட்ட மைய நூலகம் அருகே நகராட்சி நூற்றாண்டு விழா நிதியில் 10 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலைநீா்த் தேக்கத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், அங்கிருந்து குழாய் பதிப்பதற்கு நிதி இல்லாததால் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி செயல்படவில்லை. ஓராண்டுக்குப் பின்னா் தற்போது கல்லூரி சாலை, அகமது நகா் மேல் நிலை நீா்த் தேக்கத் தொட்டிகளுக்கு குழாய் பதிக்க ஒப்பந்தம் விடப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் அகமது நகா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு குழாய் பதிப்பதற்காக அருகில் உள்ள வாருகாலை அடை த்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், வாருகாலில் கழிவுநீா் செல்ல முடியாமல் சாலை மற்றும் மாவட்ட மைய நூலக பகுதியில் தேங்கியுள்ளது. மேலும், செவ்வாய்க்கிழமை இரவு தொடா் மழை பெய்ததால் இப்பகுதி முழுவதும் கழிவுநீா் தேங்கி துா்நாற்றாம் வீசுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே, வாருகால் அடைப்பை நீக்கி கழிவுநீா் வெறியேற நகராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.