

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் சனிக்கிழமை மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மதுரையில் இருந்து சுரண்டை சென்ற காரும், தென்காசியில் இருந்து மதுரை சென்று கொண்டிருந்த காரும் நேருக்கு நேர் வேகமாக மோதியது.
இதில் இரண்டு கார்களின் ஓட்டுனர்கள் உட்பட கார்களில் பயணம் செய்த 6 பேரும் படுகாயமடைந்தனர்.
அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு படுகாயம் அடைந்த 6. பேரும் அழைத்துச் செல்லப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் இரண்டு கார்களில் இருந்த பாவூர் சத்திரம் அருகிலுள்ள நாட்டார் பட்டியைச் சேர்ந்த முருகன் வயது 24 மற்றும் செல்வி (50), கீழச்சுரண்டை யைச் சேர்ந்த முருகன் வயது 54. தென்காசி மேலகரம் பகுதியைச் சேர்ந்த பத்மாவதி வயது 50 மற்றும் முல்லை பார்வதி (34) அவரது கணவர் ஹரி சங்கர் (36) ஆகியோர் படு காயமடைந்தனர்.
இவர்களில் முல்லை பார்வதி தவிர அனைவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.