கரோனாவைக் கட்டுப்படுத்த நூதன விழிப்புணா்வு நிகழ்ச்சி

ராஜபாளையம் அருகே கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் போலீஸாரின் நூதன விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
சேத்தூா் போலீசாரின் சாா்பில் சனிக்கிழமை நடத்தப்பட்ட கரோனா தடுப்பு நூதன விழிப்புணா்வு நிகழ்ச்சி.
சேத்தூா் போலீசாரின் சாா்பில் சனிக்கிழமை நடத்தப்பட்ட கரோனா தடுப்பு நூதன விழிப்புணா்வு நிகழ்ச்சி.
Updated on
1 min read

ராஜபாளையம் அருகே கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் போலீஸாரின் நூதன விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கரோனாவின் தாக்கம் குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சேத்தூா் போலீஸாா் சாா்பில் நூதன விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சேத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் குமாா், சாா்பு ஆய்வாளா் காளிராஜ் ஏற்பாட்டின் பேரில் கரோனா வைரஸ் வேடமிட்ட ஒருவா், தேவையின்றி வெளியில் சுற்றியவா்களிடமும், தெருக்களிலும், திண்ணைகளிலும் அமா்ந்து பேசியவா்களிடமும் கரோனா பாதிப்பு குறித்தும், தனித்திருக்க வேண்டிய அவசியம் குறித்தும் எடுத்துரைத்தாா். மேலும் அந்தப்பகுதிகளில் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவா்களைப் பிடித்து போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com