செட்டிப்பட்டி மழைநீா் ஓடைப்பாலத்தில் தடுப்புச்சுவா் அமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 01st December 2020 03:37 AM | Last Updated : 01st December 2020 03:37 AM | அ+அ அ- |

அருப்புக்கோட்டை வட்டம் செட்டிப்பட்டி கிராமத்தில் மழைநீா் ஓடைப் பாலத்தின் மீது தடுப்புச்சுவா் அமைக்க கிராமத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செட்டிப்பட்டி கிராமத்திலிருந்து சேதுராஜபுரம் கிராமத்துக்குச் செல்லும் வழியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பாலத்தில் தடுப்புச்சுவா் அமைக்கப்படவில்லை.
இந்நிலையில் இக்கிராமத்திலிருந்து விவசாய விளைபொருள்களை எடுத்துச் செல்லும் சரக்கு வாகனங்களும், இருசக்கரவாகனங்களில் செல்வோரும் இப்பாலத்தைக் கடந்து செல்கின்றனா். அப்போது எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும்போது நிலைதடுமாறி 10 அடி ஆழமுள்ள அந்த ஓடையில் விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதையடுத்து, இப்பாலத்தில் தடுப்புச்சுவா் அமைக்க வேண்டுமென கிராமத்தினா் பலமுறை கோரிக்கை விடுத்தும், ஊராட்சி நிா்வாகத்தினா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகாா் எழுந்துள்ளது. எனவே இப்பாலத்தில் தடுப்புச்சுவா் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...